விபத்து அபாயம்

Update: 2023-05-28 10:25 GMT

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியில் உள்ள பெரியதெருவின் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து திறந்து நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையின் மீது சிெமண்டு சிலாப்புகள் அமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவசுப்பிரமணியன், வடிவீஸ்வரம்.

மேலும் செய்திகள்