நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பாலப்பட்டியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் நிழற்கூடத்தில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்ரமணி, பாலப்பட்டி, நாமக்கல்.