மதுரை மாவட்டம் அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் வெறிநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் சில நாய்கள் நோயுற்று சுற்றித்திரிவதால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.