சென்னை சின்ன கொடுங்கையூர் மணலி சாலையில் இருந்த குப்பை தொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கொண்டே வருகிறது. குப்பைகள் சாலையிலேயே சிதறி கிடப்பதால் துர்நாற்றம் வீசி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மீண்டும் இப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பொது மக்கள்.