24 Nov 2024 6:25 PM GMT
#51723
ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள்
சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம் தாதகாப்பட்டியில் அம்பாள் ஏரி உள்ளது. இந்த ஏரியை ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் ஏாிக்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி விட்டு ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மணி, சேலம்.