25 Aug 2024 6:03 PM GMT
#49394
மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்த வாய்க்கால்
நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
மோகனூர் நாவலடியான் கோவில் அருகில் வாய்க்கால் செல்கிறது. இதனை ஆக்கிரமித்த மதுப்பிரியர்கள் கரையோரம் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அங்கே வீசி செல்கின்றனா. இதனால் வாய்க்கால் நீர், நிலம் மாசடைகிறது. மேலும் வாய்க்கால் கரையோரம் யாரும் செல்ல முடியாத வகையில் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குடித்துவிட்டு பாட்டில்களை வீசி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?
-விஸ்வநாதன், நாமக்கல்.