26 May 2024 5:47 PM GMT
#47056
நீரோடை தூர்வாரப்படுமா?
புங்கவாடி
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் சிறிய நீரோடை உள்ளது. இந்த நீரோடையின் வழியாக தண்ணீர் கால்வாய்க்கு செல்லும். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நீரோடை தூர் வாரப்படாமல் உள்ளது. இந்த நீரோடை சுத்தம் செய்யப்படாமல் முட்புதர் மண்டி விஷ பூச்சிகளின் வாழ்விடமாகவும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நீரோடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.