26 May 2024 5:37 PM GMT
#47050
ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?
நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் விஷ பாம்புகள் புகுந்து விடுகின்றன. மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பீட்டர், பள்ளிபாளையம்.