19 May 2024 3:41 PM GMT
#46826
குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி தரப்படுமா?
தாரமங்கலம்
தெரிவித்தவர்: சசிகுமார் சமூக ஆர்வலர்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் முன்பு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் அதில் குடிநீர் வருவதில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக குடிநீர் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?