28 April 2024 5:48 PM GMT
#46387
அபாய நிலையில் குடிநீர் தொட்டி
A.METTUPATTI
தெரிவித்தவர்: VASANTHI MANIKUMAR
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் அ.மேட்டுப்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. குடிநீர் தொட்டியை சுற்றி உள்ள தூண்களும் சேதமடைந்து வருகிறது. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பு அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும்.