31 Dec 2023 1:24 PM GMT
#43313
சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி
கே-ராசியமங்கலம்
தெரிவித்தவர்: ரஞ்சித்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே-ராசியமங்கலம் கடைவீதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.