8 Aug 2022 12:39 PM GMT
#6972
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
வடகாடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு கால்நடை மருத்துவமனை அருகே உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருசில இடங்களில் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே பொதுமக்கள் நடமாடும்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.