9 April 2023 2:12 PM GMT
#30541
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி
திருவரங்குளம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.