8 Jan 2023 10:40 AM GMT
#25080
குடிநீர் தொட்டியை சூழ்ந்த புதர் செடிகள்
பன்னீருத்து
தெரிவித்தவர்: கொம்பையா
மானூர் யூனியன் சுண்டங்குறிச்சி பஞ்சாயத்து 9-வது வார்டு பன்னீருத்து பகுதியில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பற்று சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் குடிநீர் தொட்டியை சூழ்ந்து புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே புதர் செடிகளை அகற்றி, குடிநீர் தொட்டியை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.