13 Nov 2022 12:25 PM GMT
#21474
தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: மோகன்
தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் ஆர்ச் பஸ்நிறுத்தம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. பள்ளபாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோகன்,மங்கலம்.
97708594977