Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2022 2:59 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18494

மின் இணைப்பு பெட்டி அகற்றப்படுமா?

மின் இணைப்பு பெட்டி அகற்றப்படுமா?மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பகுதியில் பஸ் நிறுத்தம் அருகே நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இது பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. எனவே அதை உடனடியாக அகற்ற மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 2:59 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18493

ஆபத்தான சாலை தடுப்பு

மற்றவை

பெங்களூரு சதாசிவாநகர் பகுதியில் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு (பேரிகேட்) ஒன்று உள்ளது. இந்த இரும்பு தடுப்பில் மோதி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே ெபரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த இரும்பு தடுப்பை இடமாற்றம் செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 2:59 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18492

நடைபாதையில் நிற்கும் கார்

நடைபாதையில் நிற்கும் கார்மற்றவை

பெங்களூரு சாந்திநகர் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையில் சிலர் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகளால் பயன்படுத்த முடியவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 2:58 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#18491

சாலை பள்ளங்கள் சரி செய்யப்படுமா?

சாலை

பெங்களூரு சதாசிவாநகர் 5-வது கிராஸ் பகுதியில் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைகாலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும், இந்த பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அந்த பள்ளங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:51 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17414

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

மற்றவை

பெங்களூரு கே.ஆர்.புரம் ஏரி பகுதியில் பழைய மெட்ராஸ் சாலையில் சிலர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:51 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17413

இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவர்

மற்றவை

பெங்களூரு மர்பி டவுன் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சுற்றுச்சுவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. ஆனால் பல நாட்கள் ஆகியும் அந்த சுற்றுச்சுவர் கட்டப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மையத்தின் சுற்றுச்சுவரை கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:51 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17412

பகல் நேரங்களில் எரியும் தெரு மின்விளக்குகள்

பகல் நேரங்களில் எரியும் தெரு மின்விளக்குகள்மற்றவை

பெங்களூரு மாகடி ரோடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சாலையோர தெரு மின்விளக்கு கம்பங்கள் உள்ளன. இரவு நேரங்களில் எரியவிடப்படும் மின்விளக்குகள் பகல் நேரங்களில் அணைக்கப்படாமல் உள்ளன. நிலக்கரி கொள்முதல் கட்டணம் உயர்வால் மின்கட்டணத்தை உயர்த்தி வரும் நிலையில் பகலில் தெரு மின்விளக்குகளை எரியவிடுவதால் மின்சாரம் வீணாகிறது.எனவே மின்சார துறை அதிகாரிகள் அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:50 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17411

பாதசாரிகளை அச்சுறுத்தும் கம்பி வேலி

மற்றவை

பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் நடைபாதை அருகே உள்ள நிலத்திற்கு கம்பி வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியில் முட்கள் போல் சிறு கம்பிகள் நீண்டு கொண்டு உள்ளது. இதனால் அந்த நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் அந்த கம்பிகளால் அடிக்கடி காயம் ஏற்பட்டு அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த கம்பி வேலியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:50 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17410

சுவரொட்டிகள் அகற்றப்படுமா?

மற்றவை

பெங்களூரு 100 அடி சாலையில் பி.எம்.டி.சி. அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் சுற்றுச்சுவரில் அரசியல் கட்சிகள் மற்றும் திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பி.எம்.டி.சி. அலுவலக சுற்றுச்சுவர் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. எனவே சுவரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 2:43 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17215

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்

பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்கள்சாலை

பெங்களூரு மாரத்தஹள்ளி ஸ்பைஸ் கார்டன் அருகே உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையால் அந்த சாலை மிகவும் மோசமானது. இதனால் அந்த சாலையில் வாகனங்களை இயக்குவதற்கு வாகன ஓட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையை சரிசெய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 2:43 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17214

சாலையில் நிற்கும் மாநகராட்சி லாரி

போக்குவரத்து

பெங்களூரு வசந்த் நகர் ரேஸ்கோர்ஸ் சாலையில் ஓரத்தில் மாநகராட்சி குப்பை லாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 2:43 PM GMT
ஹர்ஷா | பெங்களூரு
#17213

சாலையோரம் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவுகள்

சாலையோரம் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவுகள்மற்றவை

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் சிந்தூர் திருமண மண்டபம் அருகே உள்ள சாலையோரம் சாக்கடை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அந்தப்பகுதியில் குவிந்து கிடக்கும் சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும், அங்கு சாக்கடை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick