Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5757

நடைபாதையின் அவல நிலை

மற்றவை

பெங்களூருவில் கன்னிங்காம் கிரெசன்ட் சாலை உள்ளது. இந்த சாலையில் ரிசர்வ் வங்கி செல்லும் நடைபாதையில் சிமெண்டு சிலாப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் மின்கம்பிகள் அங்கு வீசப்பட்டுள்ளன. இதனால் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5756

போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?சாலை

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலை ஓரங்களில் பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. மேலும் அதன் அருகில் மலைபோல் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தவறுதலாக அந்த குழிக்குல் விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5755

நடைபாதையில் கிடக்கும் குப்பை கழிவுகள்

நடைபாதையில் கிடக்கும் குப்பை கழிவுகள்குப்பை

பெங்களூரு காந்திநகர் 6-வது கிராஸ் பகுதியில் சாலையோர நடைபாதையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அங்கு குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. பல நாட்களாக அந்த குப்பை கழிவுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தபடாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 2:48 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#5754

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

மற்றவை

பெங்களூரு வசந்த்நகர் பகுதியில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தெருவிளக்குகள் பகலிலும் ஒளிருகிறது. இரவில் போடப்படும் இந்த தெருவிளக்குகள் பகல் நேரங்களில் அணைக்கப்படாமல் உள்ளது. இதனால் மின்சாரம் வீணாகிறது. பெஸ்காம் ஊழியர்கள் முறையாக அந்த மின்விளக்குகளை பராமரிக்காமல் உள்ளனர். எனவே மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 July 2022 2:37 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#2838

பதிவு எண் இல்லாமல் சுற்றித்திரியும் ஆட்டோ

மற்றவை

பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் அருகில் நடமாடும் பெட்டிகடையுடன் ஆட்டோ ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த ஆட்டோவில் பதிவு எண் இல்லாமல் உள்ளது. அந்த ஆட்டோ திருடப்பட்டு, சட்டவிரோதமாக இயக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த ஆட்டோ குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#2272

சாலை பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

பெங்களூரு பி.சி.ரோட்டில் பலேபேட் கிராஸ் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, அந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த சாலையில் வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் ஏறி, இறங்கும்போது தவறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலை பள்ளங்களை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 3:22 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு புறநகர்
#2271

நடைபாதையை ஆக்கிரமித்த கட்டுமான பொருட்கள்

மற்றவை

பெங்களூரு கோரமங்களா பகுதியில் 80 அடி சாலை 6-வது பிளாக் பகுதியில் சாலையோ நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த நடைபாதையில் கட்டுமான பொருட்கள் போடப்பட்டு இருந்தது. ஆனால் பல நாட்கள் ஆகியும் இன்றுவரை அந்த பொருட்கள் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் அந்த கட்டுமான பொருட்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:46 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#2118

சேதமடைந்த பஸ் நிறுத்த இருக்கைகள்

மற்றவை

பெங்களூருவில் மேக்ரி சர்க்கிள் உள்ளது. இந்த பகுதியில் பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பஸ் நிறுத்தத்தின் இருக்கைகள் சேதமாகின. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் அந்த இருக்கைகளை அகற்றாமல் உள்ளனர். எனவே பயணிகளின் நலனுக்காக அந்த இருக்கைகளை விரைவாக அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 3:46 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#2117

சிதிலமடைந்து கிடக்கும் நடைபாதை

மற்றவை

பெங்களூரு பி.இ.எம்.எல். லே-அவுட் 8-வது மெயின் சாலையில்,நந்தினி பாலகம் உள்ளது. இதன் அருகில் உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையில் உள்ள கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால் பாதசாரிகள் அந்த நதைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிதிலமடைந்த நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 July 2022 2:30 PM GMT
பொதுமக்கள் | பெங்களூரு
#2078

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

மற்றவை

பெங்களூரு பி.டி.எம். லே-அவுட் பி.டி.எம். ஏரிக்கு செல்லும் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையின் குறுக்கே மாடுகள் படுத்து கொள்கின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாடுகளை கோசாலையில் விட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:30 PM GMT
பொதுமக்கள் | தட்சிண கன்னடா
#1893

தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

தரைப்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்சாலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு ரெயில் நிலையம் அருகில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தை வீரநகர், படீல் பகுதிகளுக்கு செல்பவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு, அந்த தரைப்பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அங்கு கொசுக்கள் உண்டாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:29 PM GMT
பொதுமக்கள் | தட்சிண கன்னடா
#1892

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் திருநங்கைகள்

மற்றவை

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூருவில் இருந்து உடுப்பி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோடிக்கல் பிரிவு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் நின்று கொண்டு அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு, திருநங்கைகள் தொல்லை கொடுத்து வருகின்றனர். அவர்களின் இந்த செயலால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அதற்கு தீர்வு காண வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick