10 Sep 2023 11:11 AM GMT
#39528
இரவு நேர புறநகர் பஸ் வழித்தடம் மாற்றப்படுமா?
வேலூர்
தெரிவித்தவர்: லாயன். ஆர். குப்புராஜ்
வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தம் சென்னை-பெங்களூரு தெசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்தப் பஸ் நிறுத்தத்தில் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரு மார்க்கத்திலும் பயணிகள் வந்து இறங்குகின்றனர். இந்தப் பஸ் நிறுத்தம் அமைந்துள்ள இடத்தில் இரவு 9 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாமலும், போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமலும்,பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை இருமார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்துப் புறநகர் பஸ்களும் வள்ளலார் பஸ் நிறுத்தத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் வரை சர்வீஸ் சாலை வழியாக இயக்க வேண்டும். எனவே இரவு நேர புறநகர் பஸ் வழித்தடத்தை மேற்கண்ட வழியாக மாற்ற போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்குமா?
-அரிமா ஆர். குப்புராஜ், வேலூர்.