24 Sep 2022 11:18 AM GMT
#16900
தலைகீழான எச்சரிக்கை பலகை
காட்பாடி
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
வேலூர், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்துப் போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காட்பாடியில் உள்ள முக்கியமான இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அவற்றில் சித்தூர் பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை பலகை தலைகீழாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதனை அலட்சியமாகக் கொண்டு அங்கு வாகனங்களை நிறுத்தி உள்ளனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைத்தியவீரராகவன், காட்பாடி.