19 Nov 2023 6:23 AM GMT
#42117
பயணிகளை பரிதவிக்க விடும் பஸ்கள்
மருதகுளம்
தெரிவித்தவர்: பாரத்
நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மூன்றடைப்பு சர்வீஸ் சாலையில் நின்று செல்லாமல், நாற்கர சாலையிலே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இரவு 7 மணிக்கு பிறகு பெரும்பாலான பஸ்கள், பெயர் பலகையின் மின்விளக்கை அணைத்து விட்டு நிற்காமல் செல்கின்றன. இதனால் பயணிகள் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் சர்வீஸ் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுகிறேன்.