Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 Feb 2023 10:17 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26612

கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலை

சாலை

திருப்பூர் டி.கே.டி.மில்லில் இருந்து கணபதிபாளையம் வழியாக பொங்கலூர் செல்லும் சாலையில் சென்னிமலைபாளையம் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.--------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 10:16 AM GMT
Mr.R.Maharaja | உடுமலைப்பேட்டை
#26611

பயன்படுத்தப்படாத கட்டிடம்

மற்றவை

கொமரலிங்கம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கே தனியாக பல படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. இங்கு வரும் அவசர நோயாளிகளை உடுமலையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய சூழல் நிலவுகிறது. கொமரலிங்கதிலிருந்து உடுமலைக்கு 14 கிலோமீட்டர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை பயன்படுத்தினால் சுற்று வட்டாரமக்கள் மிகவும் பயனடைவார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#26610

கரடு, முரடான சாலை

சாலை

ஊத்துக்குளி தாலுகா எஸ்.பெரியபாளையம் ஊராட்சி பாரப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி போகும் வழியில் காங்கிரீட் சாலை மிகவும் கரடுமுரடாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்கப்படுமா என்று அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பர்ப்பில் உள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Feb 2023 10:13 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#26609

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் ஒரு ஆண்டாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, ெகாசு தொல்லையும் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல அந்த பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 9:55 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26377

மூடப்படாத கழிவு நீர் கால்வாய் குழி

சாலை

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் கழிவு நீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல்லடம் பஸ் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய 2 இடங்களில் குழிகள் போடப்பட்டுள்ளது. அந்த குழிகளுக்கு மூடிகள் போடப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவேகுழியை உடனே மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.----

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 9:52 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#26376

சாயும் நிலையில் மின்கம்பம்

மற்றவை

ஈட்டிவீரம்பாளையம் கருக்கன் காட்டுப்புதூரில் கீழே சாய்ந்து விழும் சூழலில் மின்கம்பம் காணப்படுகிறது. இந்த மின் கம்பம் அருகில் உள்ள கோவில் மது சாய்ந்து விழும் என்று பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர்.எனவே மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 9:51 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26375

சோதனைச்சாவடி திறக்கப்படுவது எப்போது?

மற்றவை

வீரபாண்டி போலீஸ் நிலைய எல்லை முடிவில் சோதனைச்சாவடி திறக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு வந்துள்ள புதிய கமிஷனர் இந்த சோதனைச்சாவடியை திறந்து பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 9:49 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26374

எப்போது தீரும்நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பூர் கோர்ட்டு வீதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் இரவு நேரம் 30 நாய்கள் கூட்டமாக படுத்து கிடக்கிறது. இரவு நேரம் அந்த வழியாக வாகனங்களில் செல்வர்களை நாய்கள் கூட்டமாக துரத்துகிறது. இதனால் அவர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறது. இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் ெ தரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இப்போது நாய்கள் பெருகி விட்டது. எனவே உடனேநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26373

சாலையின் நடுவே ஆபத்தான குழி

மற்றவை

திருப்பூரில் ஆங்காங்கே நள்ளிரவில் குடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டுகிறார்கள். அதில் குழாய் பதித்தவுடன் குழியைசரியாக மூடுவதில்லை. மாநகராட்சி சார்பாக தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படுகிறது. ஆனால் தனியார் வீடுகளுக்கும், நிறுனங்களுக்கும் குழாய் பதிக்க குழி தோண்டும் முறையாக மூடப்படுவதில்லை. இதனால் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளுடன் செல்பவர்கள் விழுந்து விடுகிறார்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#26312

விபத்தை ஏற்படுத்தும் குழிகள்

விபத்தை ஏற்படுத்தும் குழிகள்சாலை

விபத்தை ஏற்படுத்தும் குழிகள் திருப்பூர் மாநகரில் பெரும்பாலான சாலைகள் அகலம் குறைவாகி குறுகியதாகவே உள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறுகிய சாலைகளில் ஆங்காங்கே குழிகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் விழுந்து காயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்தவகையில் எம்.எஸ்.நகர் அருகில் சாலையின் வளைவு பகுதியில் பெரிய குழி ஒன்றுள்ளது. வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. -பிரபு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#26311

சாலையோரம் ஆபத்தான குழி

சாலை

சாலையோரம் ஆபத்தான குழிதிருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாமல் உள்ளது. இதன் அருகே எந்தவித பாதுகாப்பு தடுப்பும் வைக்கப்படாமல் உள்ளன. இந்த சாலையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் முதல் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.  இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள குழியில் வாகனங்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:39 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#26310

அரசு பள்ளி வளாகத்தில் பாறை

அரசு பள்ளி வளாகத்தில் பாறைமற்றவை

அரசு பள்ளி வளாகத்தில் பாறைபல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததும் அனைவரையும் வரவேற்கிறது மிகப்பெரிய பாறை. இதனால் மாணவ- மாணவிகளுக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர் கருதுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், குறுகிய இடத்திற்குள் பள்ளி அமைந்துள்ளது. மாணவ-மாணவிகள் இதற்குள்தான் விளையாடுகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் மிகப்பெரிய பாறை ஒன்று உள்ளது. இதனை நீண்ட காலமாக அகற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick