Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37256

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி முன்பாக பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்து காணப்படுகிறது. அதன் மீது கற்களும், மரக்கிளைகளும் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்லும் போது குழி இருப்பதை கவனிக்காமல் தவறி விழுந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் குழிக்கு மூடி போட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37253

நூலகம் முன்பு தேங்கி நிற்கும் கழிவு நீர்

மற்றவை

திருப்பூர் -அவினாசி ரோடு குமார் நகரில் நூலகம் உள்ளது.இந்த நூலகத்திற்கு தினமும் அதிக எண்ணிக்கையிலான வாசகர்கள் வருகிறார்கள். ஆனால் நூலகத்தின் அருகில் உள்ள மீன்கடையின் கழிவு நீர் நூலகம் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் நூலகத்திற்குள் இருந்து நூல்களை வாசிக்க முடியவில்லை. எனவே மீன்கடையின் கழிவு நீரை நூலகம் முன்பு தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#37251

அவினாசிக்குள் வராத பஸ்கள்

போக்குவரத்து

அவினாசியில் இருந்து கோவைக்கு மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். ஆனால் திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து வரும் பஸ்கள் அவினாசிக்கு வருவது இல்லை. மேலும் இடைப்பட்ட நிறுத்தங்களில் பஸ் நிற்காது என்று பயணிகளை பஸ்சில் இருந்து இறக்கி விடுகின்றனர். அதேபோல் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு செல்லும் ஒரு சில பஸ் தவிர தனியார் உள்ளிட்ட மற்ற அனைத்து பஸ்களும் அவினாசிக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று வருகின்றன. எனவே அனைத்து பஸ்களும் அவினாசி வழியாக போய் வர போக்குவரத்து...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#37066

குண்டும் குழியுமான சாலை

சாலை

திருப்பூர் மாநகராட்சி முத்தனம்பாளையம் பிரதான சாலை யோரமாக புதிய குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த குழாய்களில் தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்கும் நிலையில் அந்த குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இன்று வரை இந்த சாலையை சீரமைக்கவில்லை. எனவே சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37064

ஒளிராத தெருவிளக்குகள்

மற்றவை

சோளிபாளையம் பாரதி நகர் செல்லும் வழியில் கணியாம்பூண்டி ரோட்டில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரம் உள்ளே சோளிபாளையம் பாரதி உள்ளது. இந்த ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் ஒரு வாரத்திற்கு மேல் எரியாமல் உள்ளது. இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது. எனளவே தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 10:18 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#37063

சாலை ஆக்கிரமிப்பு

சாலை

திருப்பூர் போயம்பாளையம் மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக விபத்து ஏற்படுகின்றது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36842

மரங்களை வெட்டுவது ஏன்?

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு கிராம நிர்வாக அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரில் நிழல் தரும் மரங்களை மர்ம ஆசாமிகள் வெட்டுகிறார்கள். மின்சார தடையின் போது மின்சார வாரியம் மரக்கிளைகளை வெட்டுகிறது. பசுமையான நகரமான 15 வேலம்பாளையத்தை மரங்களை வெட்டி பாலைவனம் ஆக்க வேண்டாம். மரத்தை வெட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36841

சாலை ஆக்கிரமிப்பு

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு கருப்பராயன் கோவில் அருகே உள்ள சலையோரம்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:45 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#36840

ஒளிராத மின்விளக்குள்

மற்றவை

கொங்கணகிரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் பெண்கள் வேலைக்கு சென்று வர சிரமமான சூழ்நிலை உள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பு கருதி மின்விளக்குகள் எரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#36839

பஸ்கள் இயக்க கோரிக்கை

மற்றவை

திருப்பூரில் இருந்து ஆதியூர் வழியாக குன்னத்தூர் செல்லும் பஸ் சரியான நேரத்துக்கு இயக்கப்படுவதில்லை. இதனால் பஸ் நிலையத்தில் மக்கள் அவதி படுகின்றனர். எனவே சரியான பஸ்களை இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36838

போக்குவரத்து நெரிசல்

மற்றவை

திருப்பூரில் பிரதான சாலைகளின் இருபுறமும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி வைத்து விடுகிறார்கள். இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே சாலையின் இருபுறமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவுரை கூற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 July 2023 12:46 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#36698

வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர்தண்ணீர்

வீணாகும் குடிநீர்திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள ஜம்மனை ஓடை பாலத்தின் கீழ் குடிநீர் குழாய் உள்ளது. இது சரியாக வால்வு மூடாததால் நீர் கசிந்து அதிகமாக வீணாகிக்கொண்டே இருக்கிறது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வின்சென்ட்ராஜ், திருப்பூர்.8976536257

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick