Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Aug 2023 4:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38855

வேகத்தடை அமைக்க வேண்டும்

சாலை

சேலம் கரும்பாலை முதல் செங்கரடு வரை குண்டூர் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் எந்த நேரமும் பரப்பரப்பாக காணப்படுகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்க அதிகாரிகள் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோவன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#38852

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகே வேகத்தடையை ஒட்டியுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வாகனங்களில் வருவோரும் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஹரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#38851

ஐந்து அடுக்கு கார் பார்க்கிங்

போக்குவரத்து

சேலம் புதிய பஸ் நிலையத்தில் 5 அடுக்கு கொண்ட கார் பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் கார்களை நிறுத்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?. -வேல்மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#38850

எரியாத தெருவிளக்குகள்

மின்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆவணிப்பேரூர் கீழ் முகம் கிராமம் மல்லிப்பாளையத்தில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் மர்மநபர்களின் நடமாட்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -ஹரிகிருஷ்ணன், மல்லிப்பாளையம், எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38848

திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் தொட்டிபட்டி பஞ்சாயத்தில் 5, 6 -வது வார்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -கனகு, தொட்டிபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38845

பக்தர்களுக்கு இடையூறு

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாட்டில் வரலாற்று புகழ்வாய்ந்த அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் சுற்றுப்புற சூழல் மாசுபட்டு வருகிறது. எனவே கோவிலுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சண்முகம், செம்மேடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38843

திறக்கப்படாத நூலகம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த கலியனூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே நூலகம் அமைந்துள்ளது. அந்த நூலகம் பல ஆண்டுகளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு தடைபட்டுள்ளது. எனவே அறிவு திறனை வளர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை திறக்க வேண்டும். -யோகேஸ்வரன், கலியனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#38842

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் மதியம்பட்டி ஏரியில் இருந்து மதியம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் வழியில் உள்ள மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இந்த வழியே செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகனங்களில் செல்வோரும் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -செல்வம், மதியம்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:33 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38830

விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்கின்றனர். இதனால் சாலையில் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் இவ்வாறு சாகசங்களில் ஈடுபவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -விஜயேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:32 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38828

நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் இணைப்பு வழங்கப்படுமா?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி கீழ் வீதி பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் முறையான இணைப்பு கொடுக்கப்படாததால் பலனற்று கிடைக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இந்த நீர்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மத்தூர் நகரின் முக்கிய வீதியான கீழ் வீதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு இணைப்புகளை தர வேண்டும். -சந்தோஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38827

மீண்டும் பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து பாம்பாறு அணை, மிட்டப்பள்ளி வழியாக கொட்டுக்காரன்பட்டி கிராமத்திற்கு காலை, மதியம், இரவு என 3 முறை நகரப் பஸ் சென்று வந்தது. கடந்த ஒரு ஆண்டாக இரவு நேரத்தில் இந்த கிராமப்புறங்களுக்கு செல்லும் நகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் கிராமப்புற பெண்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே நிறுத்தப்பட்ட நகர பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சாமிநாதன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2023 4:31 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#38826

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் அகசிப்பள்ளி பஞ்சாயத்து முல்லை நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக திரிவதால் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடித்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -மாதேஸ்வரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick