Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Sep 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39914

ஜல்லிகற்கள் பெயர்ந்த சாலை

சாலை

ராசிபுரம் அருகே அப்பநாயக்கன்பட்டியில் இருந்து குருசம்பாளையம் வரை செல்லும் தார்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலரும் தினமும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சாலை மோசமான நிலையில் இருந்து வருவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். -குகன், குடுசம்பாளையம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39913

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

வெண்ணந்தூர் ஒன்றியம் வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிலையம் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் இருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உயர்கோபுர மின்விளக்கை சரி செய்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். -தனசேகரன், வெள்ளைபிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:33 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39912

அன்றும்... இன்றும்...

ட்ரெண்டிங்

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் வாழவந்திநாடு ஊராட்சியில் ஊர்புறம் கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்கூடத்தை சுற்றி செடி கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் நடமாட்டம் இருந்தது. இதுதொடர்பாக கடந் 4-ந் தேதி ‘தினத்தந்தி’யில் புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்த நிழற்கூடத்தை அகற்றி சுத்தம் செய்து செடி, கொடிகளை அகற்றினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த கொல்லிமலை ஊராட்சி நிர்வாகத்துக்கும், செய்தி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39910

பாதியில் நிற்கும் சுற்றுச்சுவர் பணி

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட 6 மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. பின்பு கிடப்பில் போடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டது. இந்த பள்ளி சற்று ஒதுக்குப்புறமாக தனியாக இருப்பதால் நள்ளிரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. எனவே தாமதம் இன்றி சுற்றுச்சுவர் கட்ட மாணவர்களின் பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் கோரிக்கை விடுகின்றனர். -பழனி, மல்லப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:28 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39908

மதுபானக்கடை இடமாற்றப்படுமா?

மற்றவை

போச்சம்பள்ளியில் நான்கு ரோடு முதல் சந்தூர் செல்லும் சாலையானது வணிக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு வரும் மதுபான பிரியர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை சந்தூர் ரோடு முழுவதும் ஆங்காங்கே நிறுத்தி விட்டு மது குடிக்கச் செல்வதுடன் வாகனங்களை தாறுமாறாகவும் ஓட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த கடையை நகரின் எல்லைக்கு வெளியே இடமாற்றம் செய்து அமைக்க வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39907

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மல்லப்பாடியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலன், மல்லப்பாடி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#39906

தெருநாய்களால் மக்கள் அச்சம்

மற்றவை

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. இதே போல் பகலில் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்து கொண்டே செல்கின்றனர். எனவே பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தெருநாய்கள் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:26 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39903

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அங்கு வரும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை நாய்கள் துரத்துவது‌ வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் தெருநாய்களால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். எனவே மாவட்ட விளையாட்டு அரங்குகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39902

குழியை மூட வேண்டும்

சாலை

நல்லம்பள்ளி அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நார்காரன்கொட்டாய் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 200-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையில் குழிதோண்டி உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சுப்பிரமணி, கம்மம்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39900

விபத்தை தடுக்க வேகத்தடை அவசியம்

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் பைபாஸ் பிரிவு சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கிறது. எனவே விபத்தை தடுக்க இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். -சங்கர், சித்திரப்பட்டி, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#39899

விடுதியில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதி வளாகத்தில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் விடுதியில் துர்நாற்றம் வீசுவதால் மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலமுறை புகார் அளித்தும், இதுவரை பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தங்க சரவணன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2023 2:11 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#39619

வீணாகும் காவிரி குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி ரெயில்வே (ஓலப்பாடி) ரோடு ஸ்டூடியோ முன்பு 2 வாரத்திற்கு மேலாக ஓலப்பாடி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து வீணாக சாக்கடையில் செல்கிறது. இது சம்பந்தமாக பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து காவிரி குடிநீர் குழாயை சீரமைத்து தண்ணீர் வீணாகுவதை தவிர்க்க வேண்டும். -ராமலிங்கம், ஆரியூர் தெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick