Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 March 2024 5:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#45311

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

சாலை

கிருஷ்ணகிரி நகராட்சியையொட்டி தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. சென்னை, சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் கால்நடைகள் திடீரென்று வாகனங்களின் குறுக்கே வருவதால் விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைகிறார்கள். மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றுவதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:10 PM GMT
Mr.Nagarajan | எடப்பாடி
#45180

தண்ணீர் தொட்டிக்கு மூடி

தண்ணீர்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டி வலசு கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரில் உள்ள தண்ணீர் தொட்டி மேல் மூடி இல்லாமல் இருக்கிறது. அசம்பாவித சம்பவம் எதும் ஏற்படும் முன் தண்ணீர் தொட்டிக்கு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மணிகண்டன், வெள்ளாண்டி வலசு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45178

கூடுதல் பஸ்கள்

போக்குவரத்து

நாமக்கல்-திருச்சி சாலையில் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. எனவே காலை மற்றும் மாலை வேளையில் அனைத்து வழி தடங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டும் என்பதை மாணவிகளின் கோரிக்கையாக உள்ளது. -காவேரி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 6:07 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#45177

குண்டும், குழியுமான சாலை

சாலை

பள்ளிபாளையம் ஒட்டமத்தை அருகில் ரவுண்டானா பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ரவுண்டானா பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். -ஆதவன், பள்ளிபாளையம்.

மேலும்
ஆதரவு: 32
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:51 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#45168

மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

மின்சாரம்

பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் தின்னை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதி கிராமமான இங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் பழுதடைந்து கீழே விழுந்து விட்டது. இதனால் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. - கணேசன், குறவன்தின்னை.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:44 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#45162

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

கிருஷ்ணகிரி நகரில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் செல்லும் பாதையின் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரத்தில் குப்பைகள் தேங்குவதால் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமு, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#45159

பழுதான சாலைகள்

சாலை

சூளகிரியில் உத்தனப்பள்ளி செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது. குறிப்பாக சூளகிரியில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் பாலத்தையொட்டி செல்ல கூடிய சாலை முழுவதும் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக லாரிகள் அதிகமாக செல்வதால் சாலை முழுவதும் பெயர்ந்து ஜல்லிகற்களாக கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபு, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 18
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 March 2024 5:38 PM GMT
Mr.Nagarajan | பர்கூர்
#45158

அனைத்து நாட்களும் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இருந்து தொகரப்பள்ளி, மத்தூர், ஆந்திர மாநில எல்லையில் காளிகோவில், வரமலை குண்டா வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்சில் செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் அனைத்து நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனி, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#45002

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் செவ்வாய்பேட்டை 29-வது வார்டு தேவாங்கபுரம் புது தெரு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சரி வர தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். -ராஜன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:42 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44995

மின்மயான பணிகள் முடிக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் புதிதாக மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் இடுகாடுக்கு தொலைவில் சென்று வர வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எனவே, மின் மயான பணிகனை விரைந்து முடிக்கவேண்டும். -தமிழ்ச்செல்வன், வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:39 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#44991

வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையின் பல இடங்களில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அந்த வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசி, நடுப்பட்டி.

மேலும்
ஆதரவு: 8
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 March 2024 5:30 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#44984

ஏரி தூர்வாரப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி நகரின் முக்கிய ஏரிகளில் ஒன்றாக சோகத்தூர் ஏரி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியை சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்செடிகள் மீண்டும் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து உள்ளது. எனவே இந்த ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும், ஏரியை தூர்வாரி சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பொதுமக்கள், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick