10 March 2024 5:51 PM GMT
#45168
மின்கம்பம் சரிசெய்யப்படுமா?
தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட குறவன் தின்னை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் கோபுர மின் கம்பம் அமைக்கப்பட்டது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த மலைப்பகுதி கிராமமான இங்கு அமைக்கப்பட்டிருந்த மின் கம்பம் பழுதடைந்து கீழே விழுந்து விட்டது. இதனால் பொது மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
- கணேசன், குறவன்தின்னை.