Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
16 Feb 2025 4:22 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#53893

பராமரிக்க வேண்டிய குடிநீர் தொட்டி

தண்ணீர்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் அரசம்பட்டி பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் தொட்டியின் உட்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த குடிநீரை பருகி மக்கள் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்து அந்த பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:21 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#53892

மின்விளக்குகள் சரி செய்யப்படுமா?

மின்சாரம்

பர்கூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை மைதானத்தில் நடைபெறும். இந்த மைதானத்தில் உள்ள மின்விளக்குகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக எரிவதில்லை. இதனால் இப்பகுதி வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் சிலர் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி, உடைத்து விட்டு செல்கின்றனர். எனவே தாமதமின்றி சந்தை மைதானத்தில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? -சுந்தரம், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:19 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#53715

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் ராமகிருஷ்ணா சாலையின் நுழைவு பகுதி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. பணி நிறைவடைந்த நிலையில் சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ராமகிருஷ்ணா சாலை பகுதியில் 2 பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் சாலையின் சில இடங்களில் வேகத்தடைகள் அமைத்து கொடுத்தால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே சேதமடைந்து குண்டும்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:17 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#53714

போக்குவரத்து நெரிசல்

சாலை

ஓமலூர் பயணியர் மாளிகை மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் குழியை முழுமையாக மூடவில்லை. இதனால் தினமும் இந்த சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளத்தை மணல் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக்குமார், ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:16 PM GMT
Mr.Mohan | சேலம்-வடக்கு
#53713

சாக்கடை கால்வாயை தூர்வாரலாமே!

கழிவுநீர்

சேலம் தாசநாயக்கன்பட்டி ஊராட்சி லட்சுமி நகர் 4-வது வார்டு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ேமலும் இந்த பகுதியில் சாலையும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தோஷ்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:15 PM GMT
Mr.Mohan | ஆத்தூர்
#53712

பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை

வாழப்பாடியில் இருந்து பொன்னாரம்பட்டிக்கு செல்லும் வழியில் பழனியாபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் முன்புற வளைவில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் மூடப்படவில்லை. இதனால் நாளடைவில் பள்ளம் பெரியதாகி உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். வளைவு பகுதி என்பதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -குமரன், வாழப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:05 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#53710

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராசிபுரம் நகரத்தில் சாலைகள் குறுகிய அளவில் இருந்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ராசிபுரம் கடைவீதி, கச்சேரி தெரு, பூக்கடை வீதி போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்களின் முன்பு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:03 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53709

குரங்குகள் அட்டகாசம்

மற்றவை

வெண்ணந்தூர் அருகே உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோவில், அத்தனூர், அளவாய்ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வீடுகளிலும், கடைகளிலும் உணவுப்பொருட்களை தூக்கி செல்கின்றன. மேலும் தின்பண்டங்களுக்காக குழந்தைகளை கடிக்க செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகிறார்கள். குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 3:02 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#53708

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

மல்லசமுத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காளிப்பட்டி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதி மக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, காளிப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 2:35 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#53705

சாக்கடை கால்வாய் பணியால் அபாயம்

மற்றவை

நல்லம்பள்ளி தாலுகா பாளையம்புதூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் கால்வாய் பணி தொடங்காமல் அப்படியே உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே கால்வாய் பணியை விரைந்து தொடங்கவும், விபத்துகளை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாலா, பாளையம்புதூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 2:34 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53703

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டீச்சர்ஸ் காலனி ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? -பிரபாகரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 2:33 PM GMT
Mr.Mohan | பென்னாகரம்
#53696

விதிகளை மீறும் வாகனங்கள்

போக்குவரத்து

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இதனால் கடந்த காலங்களில் ஆங்காங்கே தொடர் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றும் வாகனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அமர், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick