Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2022 2:39 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#22237

சேதமடைந்த மின் வயர்கள்

மின்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் தியாக சமுத்திரம் ஊராட்சி புள்ளபூதங்குடி ஆதிதிராவிடர் தெருவில் பல வருடங்களாக மின் வயர்கள் மாற்றாமல் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின் கம்பங்களும் கான்கிரீட் பெயர்ந்து உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் மின் கசிவும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் வயர்களை மாற்றி தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், பாபநாசம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:47 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21744

மரக்கிளை அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

கும்பகோணம் வட்டம் பழவாத்தாங்கட்டளை ஊராட்சியில் யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள காந்திஜி சாலையில் பழைய அரசு குடியிருப்பில் மிகப்பெரிய புங்கமரம் உள்ளது. தற்போது காற்றின் வேகத்தில் அருகில் உள்ள மின் கம்பியில் மரக்கிளை பட்டு மின் தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரக்கிளையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரவேல், பாரதி நகர்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:46 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21743

மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?

மற்றவை

தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமத்தில் மேலத்தெரு பகுதியில் மகளிர் சுகாதார வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.இதனால்,இங்கு வரும் பெண்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். பேராபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களிமேடு, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:44 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21741

தார்ச்சாலை வசதி வேண்டும்

சாலை

கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து குமரன்குடி ஊராட்சியில் தார்ச்சாலை போடப்படவில்லை. தற்போது உள்ள மண்சாலை மழையால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சகதியில் சிக்கி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரன்குடி, பொதுமக்கள்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:43 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21740

குரங்குகள் அட்டகாசம்

ட்ரெண்டிங்

தஞ்சை நகரில் எம்.கே. மூப்பனார்சாலை, தொல்காப்பியர் சதுக்கம், ராஜீவ் நகர் போன்ற இடங்களில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் சென்று காய்கறி மற்றும் பொருட்களை எடுத்து சென்று விடுகின்றன. மேலும் சிறுவர்களை விரட்டி சென்று குரங்குகள் கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தஞ்சை நகரில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 12:42 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21738

குண்டும், குழியுமான சாலை

சாலை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கொண்டப்பநாயக்கன்பாளையம் தெருவில் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மாதாகோவில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்அவதிக்குள்ளாகின்றனர். தற்பொழுது மழைக்கலாம் என்பதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:43 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21694

போக்குவரத்துக்கு இடையூராக மாடுகள்

மற்றவை

நாகை மாவட்டம், காடம்பாடி சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே கூட்டமாக படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால் சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை வேண்டும், மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:41 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21689

நாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கடைவீதி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும், வாகனங்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?பொதுமக்கள், கீழ்வேளூர்==========================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:40 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21683

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் -கருவேலங்கடையை இணைக்கும் பத்மநாபன் சாலை குறுக்கே ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலம் கீழ்பாலமாக உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் பாலத்தை மூழ்கி விடுகிறது. இதனால் பாலம் இருப்பது தெரியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,நாகை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:39 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21681

நூலகம் திறக்கப்படுமா?

நூலகம் திறக்கப்படுமா?ட்ரெண்டிங்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் ஊராட்சி காமராஜபுரத்தில் நூலகம் உள்ளது.இந்த நூலகம் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு இன்றி சேதமடைந்து பூட்டிக்கிடக்கிறது. இதனால் இந்தபகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் நூலகத்தை பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகத்தை புதுபித்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், திருமருகல் ====================

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2022 11:38 AM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#21680

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?மற்றவை

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பரமநல்லூர் அருகே அரசலாறு உள்ளது. இந்த ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்து உள்ளது. இதனால் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. மேலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள் திருமருகல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 1:56 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#21282

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

தஞ்சை-நாகை சாலையில் உள்ள சோழன் நகர் 3-வது தெருவில் பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் ஓடும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், சோழன்நகர்

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick