Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Jan 2023 2:17 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#25587

வாய்க்கால் தூர்வாரப்படுமா?

ட்ரெண்டிங்

தஞ்சாவூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் ஆண்டி வாய்க்கால் உள்ளது.இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் விவசாய நிலத்திற்கு, மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வாய்க்கால் சரிவர தூர்வாராத காரணத்தினால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், ராமாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:15 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#25586

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து விளந்தகண்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப்புகள் , காலி மது பாட்டில்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை அப்படியே போட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகழிவுகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள், விளந்தகண்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:14 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#25585

பள்ளம் சீரமைக்கப்படுமா?

சாலை

கும்பகோணத்திலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் கணபதி அக்ரகாரம் அருகே உள்ள தஞ்சை பிரிவு சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,கணபதி அக்ரகாரம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 2:13 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#25583

தொற்று நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

தஞ்சாவூர் பூக்கார தெருவிலிருந்து விளார் சாலை முழுவதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகளை தீவைத்து கொளுத்தி வருகிறார்கள். இதனால் தெருவில் புகை மூட்டம் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மூச்சு விடுவதில் சிரமப்படுகிறார்கள். மேலும் காற்று மாசடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், தஞ்சை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:18 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#25544

குரங்குகள் தொல்லை

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் துலாகட்டம், மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும்அச்சப்படுகின்றனர். மேலும் குரங்குகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அள்ளிசென்று விடுகின்றன.குழந்தைகள் மற்றும் சிறுவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#25541

கொசுமருந்துஅடிக்கப்படுமா?

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் கொசுக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 12:14 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#25540

விபத்து ஏற்படும் அபாயம்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை சாலையில் அவ்வப்போது அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி கனரக வாகனங்கள் செல்கின்றன. இதனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மீது உரசி தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கயிறுகள் மூலம் கட்டப்பட்டு இருந்தாலும் மூட்டைகள் கீழே விழுவதால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி விடுகின்றன. ஆகவே போக்குவரத்து அதிகாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:44 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#25521

போக்குவரத்து இடையூராக குதிரைகள். ....

போக்குவரத்து

.திருவாரூரில் சாலையில் கடந்த சில மாதங்களாக குதிரைகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. அப்போது, சில குதிரைகள் கத்திக்கொண்டே சாலையில் அங்கும் இங்குமாக தலைத்தெறிக்க ஓட்டம் பிடிக்கின்றன. இதனால், வாகனங்கள் ஓட்டி வருபவர்கள் மற்றும் நடந்து வரும் பொது மக்கள் நிலை தடுமாறுகின்றனர். இதனால், விபத்துகள் மற்றும் உயிர்பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதனால், சாலையில் சுற்றி திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:41 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#25520

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடி

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் தெற்குவீதி- கீழவீதி சந்திக்கும் இடத்தில் பனகல் சாலையில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:38 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#25519

வடிகால் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதி கூட்டுறவு நகர் அருகே உள்ள பகுதியில் வடிகால் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள்,விளமல்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:37 AM GMT
Mr. Raja | திருவாரூர்
#25518

பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

ட்ரெண்டிங்

திருவாரூர் மாவட்டம் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பாரமரிப்பு இன்றி குப்பைகள் தேங்கி சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், திருவாரூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Jan 2023 11:06 AM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#25517

இருக்கைகள் சீரமைக்கப்பட்டது

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பஸ் நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் இருக்கைகள் மற்றும் இருந்த இரும்பு கைப்பிடிகள் இல்லாமல் இருந்தது. இது குறித்து செய்தி "தினத்தந்தி" புகார் பெட்டியில் வெளியானது. இதை அதிகாரிகள் உடனடியாக கவனித்து ஆக்கூர் பஸ் நிலையத்தில் புதிதாக கைபிடிகள் அமைத்தனர். இதனை அறிந்த அந்த பஸ் பயணிகள் தவறை சுட்டிகாட்டிய "தினத்தந்தி" நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பாராட்டினர்.பொதுமக்கள், ஆக்கூர்

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick