Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Aug 2022 1:33 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#5903

சேதமடைந்த குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டிட்ரெண்டிங்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி துறவிக்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குடிநீர் தொட்டி சேதமடைந்து உள்ளது. தொட்டியின் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதன் அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம்,நூலகம்,அங்கன்வாடி கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகம்,ரேசன் கடை போன்றவை உள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், துறவிக்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Aug 2022 1:32 PM GMT
Mr. Raja | தஞ்சாவூர்
#5900

சேதமடைந்த மின் கம்பம்

மற்றவை

தஞ்சை மாநகராட்சி அண்ணா சாலையில் இருந்து தெற்கலங்கம் செல்லும் சாலை பிரியும் இடத்தில் மாவட்ட மைய நூலகத்தின் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மேல் பகுதியானது சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து உள்ளது. இதனால் எந்த நேரமும் விழும் நிலை உள்ளது. இதனால்,இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அன்பழகன், ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:26 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5713

பன்றிகள் தொல்லை

மற்றவை

நாகை மாவட்டம், வெளிப்பாளையம், காடம்பாடி, பச்சைபிள்ளையார் கோவில் தெருவில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. . இந்நிலையில் அங்கு பன்றிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிக அளவில் பன்றிகள் திரிவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:25 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5711

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு 10-க்கும் அதிகமான மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அனைத்து மின் கம்பங்களும் சேதமடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் எந்த நேரமும் கீழே விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், ஆலத்தூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:23 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5710

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்மின்சாரம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மின்கம்பிள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. தற்போது மழை பெய்து வருதால் அருகில் உள்ள மரக்கிளைகளில் மின்கசிவு ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், கிடாமங்கலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:21 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5708

மின் மாற்றி சீரமைக்கப்படுமா?

மின்சாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தாமரைப்புலம் கிராமத்தில் உதவி தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் அருகில் புதிதாக வைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளது. ஆனால் அந்த மின்மாற்றி தற்போது பழுதடைந்து விட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு அடிக்கடி மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள், தாமரைப்புலம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:19 PM GMT
Mr. Raja | நாகப்பட்டினம்
#5707

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா ?

தண்ணீர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர், ஒன்றியம் ,கூத்தூரில் இருந்து நாகைக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பைப் லைனில் குடி நீர் எடுத்து செல்லப்படுகிறது. அகரகடம்பனூர் ஊராட்சி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீிர் சாலையில் வழிந்தோடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் அகரகடம்பனூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:17 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5703

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?

பஸ் நிறுத்தம் சீரமைக்கப்படுமா?ட்ரெண்டிங்

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடி சுங்கான் கேட்டு அருகில் உள்ள பஸ் நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று தான் பஸ் ஏறும் நிலை இருந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவனூர்,மதிவாணன்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:16 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5701

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்மின்சாரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அல்லிவிளாகம் கிராமத்தில் விவசாய நிலங்கள் ஏராளம் உள்ளது. இதன் பிரதான சாலையில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது பற்றி பல முறை சம்பந்தப்பட்ட மின் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்கள், அல்லிவிளாகம்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:13 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5699

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

ட்ரெண்டிங்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டாரத்தில் அகனி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, தென்னங்குடி, மன்னன் கோவில், ஆலஞ்சேரி, கொண்டல், ஆதமங்கலம், ரெட்டிக்கோடங்குடி, பெருமங்கலம், அகர எலத்தூர், வடரெங்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் சீர்காழியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் போதுமான பஸ்கள் இல்லாமல் மாணவர்கள் அதிக அளவில் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:12 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5698

செடி, கொடிகள் அகற்றப்படுமா?

செடி, கொடிகள் அகற்றப்படுமா?ட்ரெண்டிங்

மயிலாடுதுறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளபள்ளி டபீர் தெருவில் உள்ளது. பள்ளி அருகில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது. இதனால் விஷ பூச்சிகள் பள்ளிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதர் போல் மண்டிக்கிடக்கும் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மாணவிகள், மயிலாடுதுறை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2022 1:09 PM GMT
Mr. Raja | மயிலாடுதுறை
#5695

சாலை வசதி வேண்டும்

சாலை வசதி வேண்டும்சாலை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் மே மாத்தூர் ஊராட்சியில் கண்டியன் கடலி மேல தெருவில் பழைய கப்பி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மழை பெய்ததால் மேடு, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick