19 Jan 2025 2:17 PM GMT
#53135
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சாவடி செல்லும் கஸ்டம்ஸ் சாலையோரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதில் பன்றிகள் மேய்வதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.