28 July 2024 6:10 PM GMT
#48677
சுகாதார சீர்கேடு
கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
கடலூர் உழவர் சந்தை அருகே அம்மா உணவகம் உள்ளது. இங்கு கை கழுவும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வயதான முதியவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே அங்குள்ள பள்ளத்தை மூட வேண்டியது அவசியம்.