7 July 2024 3:49 PM GMT
#48090
கட்டிட கழிவுகளால் மாணவர்கள் அவதி
கடலூர்
தெரிவித்தவர்: பள்ளி மாணவர்கள்
புவனகிரி அருகே வெய்யலூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் கட்டிட கழிவுகளை இது வரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் மாணவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.