21 Jan 2024 3:49 PM GMT
#43870
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கடலூர் முதுநகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள
கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவில் சாலையோரத்தில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை பன்றிகள் கிலறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அள்ளி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.