6 Sep 2022 10:33 AM GMT
#13127
புகார்பெட்டி செய்தி எதிரொலி; குப்பைகள் அகற்றப்பட்டது
கும்பகோணம்
தெரிவித்தவர்: Palvannan
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மேம்பாலம் அருகே பழவத்தான்கட்டளை கிராமம் விவேகானந்தாநகர் பகுதி கிளை நூலகத்தின் பக்கவாட்டில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த குப்பைத்தொட்டியை சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடந்தன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருந்தது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர்.