18 Aug 2022 2:12 PM GMT
#9172
எரியா மின்விளக்கு
புதூர்
தெரிவித்தவர்: விஜூ
திக்கணங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜூ, புதூர்.