பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத உயர் கோபுர மின்விளக்கு
குன்னம், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருதையான் கோவில் பஸ் நிறுத்தத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூ.7 லட்சம் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்தது. அதில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அடிக்கடி பழுது அடைந்து விடுகிறது. இதனால் மருதையான் கோவில் பஸ் நிறுத்தம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த இடத்தில் அரியலூர், பெரம்பலூர் செல்ல பயணிகள் காத்திருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் அச்சத்துடன் பஸ்காக காத்துக்கொண்டு இருக்க வேண்டும். அந்த பகுதியில் வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் வாகனத்துடன் மோதி விபத்துகுள்ளாகின்றனர். மேலும் மருதையான் கோவில் பஸ் நிறுத்தத்தில் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்ல வாய்ப்பாக அமைகிறது. நள்ளிரவு நேரத்தில் நிழற்குடைகளில் குற்ற செயல்களும் நடைபெறுகிறது. போதிய வெளிச்சம் இல்லாததால் போலீசார் தங்கள் கடமைகளை செய்ய திணறுகின்றனர். பழுது அடைந்துள்ள உயர் கோபுர மின்விளக்கை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அல்லது வேறு மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.