- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?
பெரம்பலூர் -துறையூர் பிரதான சாலை தற்போது அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரணாரை பிரிவு சாலை சந்திக்கும் இடத்தில் வாகனங்கள் 3 திசைகளிலும் இருந்து பிரதான சாலையை கடந்து செல்கின்றன. இப்பகுதியில் தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களில் அரணாரை, நொச்சியம், புதுநடுவலூர், செல்லியம்பாளையம், மேட்டூர் ஆகிய கிராமப் புறபகுதிகளில் இருந்து தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரம்பலூர் வந்துசெல்கின்றனர். அரணாரை பிரிவு சாலையில் பொதுமக்களும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் போதிய வெளிச்சம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளை தவிர்க்க அரணாரை பிரிவு சாலை அருகே உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர்போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




