செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் தடம் எண் 500 டீலக்ஸ் பஸ், கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்படுவதில்லை. மாறாக வண்டலூர் டீம் கம்பெனி அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ்க்காக கிளாம்பாக்கத்தில் காத்திருக்கும் மக்கள், மிகவும் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்சினை நிறுத்த நடவடிக்கை எடுப்பார்களா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.