தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிவாநகர், கே.ஆர்.ஆர். நகருக்கு செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலை குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் ஆமை வேகத்தில் செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.