தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் உள்ளூர் ஊராட்சியில் கும்பகோணம்-மயிலாடுதுறை மெயின் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது 1 மாதமாகியும் பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் நாளுக்கு நாள் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?