திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் இருந்து கீழக்குறிச்சி செல்லும் சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்களால் இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் இந்த பகுதியில் போதிய மின் விளக்கு வசதிகளும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.