கோவையில் இருந்து கூடலூருக்கு மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் வெகு நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேர பயணம் என்பதால் குளிர்ந்த காலநிலையை சமாளிக்க ஜன்னல்கள், கதவுகள் நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க வேண்டும்.