கர்நாடகா, கேரளாவில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் உள்பட தனியார் வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் வெளிமாநிலங்களுக்கும் பல்வேறு வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல், சீசன் காலங்களில் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.