சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-09-27 17:23 GMT

ஓமலூர் தொகுதி தும்பிபாடி ஊராட்சி 1-வது வார்டில் கெண்டப்பெரியான் வலசு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. மேலும் சாக்கடை நீர் சாலையில் தேங்கியபடி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இது இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

-சிவா, கெண்டப்பெரியான் வலசு, தும்பிப்பாடி.

மேலும் செய்திகள்