கழிவுநீர் கால்வாய்

Update: 2023-09-17 17:27 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா காமலாபுரம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர் காலனி பகுதியில் அதிகளவில் வெளியேற்றப்படுகிற கழிவுநீர் குழி தோண்டி தேக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கழிவுநீரால் அங்கு வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோா் இரவு நேரத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நல்லதம்பி, ஓமலூர்.

மேலும் செய்திகள்