திருப்பூர் டைமண்ட் தியேட்டர் அருகே ஆலங்காடு பகுதியில் சாக்கடை முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே அடைத்து கொசுப்புழுக்கள் அதிக அளவில் உருவாகியுள்ளன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சாக்கடை முறையாக சுத்தம் செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.