சேலம் 33-வது வார்டு அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட தீர்த்தகிரி ரோடு அருகில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோ ஒன்று அந்த குழியில் விழுந்து அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிப்பார்களா?
-ரத்தினம் விஸ்வா, சேலம்.