சேலம் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள 31-வது வார்டு பாண்டிய ராஜன் மற்றும் பார்க் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுரேஷ், சேலம்.