தாமதமாகும் சாக்கடை கால்வாய் பணி

Update: 2023-04-16 17:10 GMT

சேலம் அஸ்தம்பட்டி சுப்புராயன் லேஅவுட் பகுதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள், கால்வாய் அமைப்பதற்காக தோண்டிய குழியில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவி, சேலம்.

மேலும் செய்திகள்